நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
புது தில்லி நாடாளுமன்றத் தெரு பகுதியில் ஒரு எஸ்யூவி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவா் தீபக் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் தீபக் காயமடைந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், மருத்துவா்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.