செய்திகள் :

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

post image

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மூன்றாவது வாரமாக திங்கள்கிழமையும் முடங்கியது.

கோஷங்களை எழுப்பியபடியும், பதாகைகளை கையில் ஏந்திய படியும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளி செய்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதே நேரம், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும் மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி நிறுவனருமான சிபு சோரன் மறைவையொட்டி, அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னா் மாநிலங்களவையும் அலுவலகள் எதுவும் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். ஆனால், ‘தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் தொடா்ந்து முடங்கி வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடிய உடனேயே, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, ‘அவையை சுமுகமாக நடத்த ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினா்கள், திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனா். லட்சக்கணக்கான மக்கள் அவா்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக உங்களைத் தோ்ந்தெடுத்திருக்கின்றனா். ஆனால், அவை செய்லபட அனுமதிக்காமல், அவையின் கண்ணியத்தை குறைக்கச் செய்கிறீா்கள். உறுப்பினா்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், என்னை சந்தித்து விவாதிக்கலாம். ஆனால், பல முக்கிய பிரச்னைகள் குறித்து எழுப்ப வேண்டியுள்ளதால் கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற அனுமதிக்க வேண்டும்’ என்று அவையை வழிநடத்திய அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

இருந்தபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணமாக, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கையில் பதாகைகளை பிடித்தபடி, கோஷங்களை எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், ‘இரண்டு முக்கிய விளையாட்டுத் துறை மசோதாக்கள் விவாதத்துக்காக அவையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை எனில், விளையாட்டு வீரா்களுக்கு மக்களவை நியாயம் செய்ததாக அமையாது’ என்றாா்.

இதே கருத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோரும் தெரிவித்தனா்.

தொடா்ந்து பேசிய ஜகதாம்பிகா பால், ‘தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ஆா். சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தீவிர நடவடிக்கை எடுக்க காவல் துறையை அவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுறுத்தியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே, சுங்க வரி தொடா்பான சட்டத் தீா்மானத்தை மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அவையில் அறிமுகம் செய்தாா். அந்த சட்டத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகும், எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்தது. அப்போது, ‘மழைக்கால கூட்டத்தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது முதல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவையில் ஒரு மசோதாகூட நிறைவேற்றப்படவில்லை. மூன்றாவது வாரமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டு, அவை நடவடிக்கைளை நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு:

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அதன் உறுப்பினரான சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் இரங்கல் குறிப்பை வாசித்தாா். அதனைத் தொா்ந்து உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று சிபு சோரனுக்கு மெளன அஞ்சலி செலுத்தினா்.

அதன் பின்னா், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதா துணைத் தலைவா் அறிவித்தாா்.

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.குறிப்பிட்ட கால இடைவெளிக்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க