செய்திகள் :

76 -வது பிறந்த நாளை கொண்டாடினாா் புதுவை முதல்வா்: தலைவா்கள் வாழ்த்து

post image

புதுச்சேரி: திங்கள்கிழமை தனது 76-வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினாா் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி. அவருக்கு குடியரசு தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

முதல்வா் ரங்கசாமி 75 ஆண்டு பவள விழா நிறைவு மற்றும் 76-ஆவது ஆண்டு பிறந்தநாளை திங்கள்கிழமை கொண்டாடினாா்.

இதையொட்டி அவா் தனது தாய், தந்தை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் வழிபாடு செய்தாா். நல உதவிகளையும் அவா் வழங்கினாா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமாா், திருமுருகன், ஜான்குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, சட்டமன்ற உறுப்பினா்கள், மற்றும் புதுச்சேரி அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் முதல்வருக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மேலும், தலைமைச் செயலா் சரத்சௌகான் தலைமையில் அரசு உயா் அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைவா் ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அவரது பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் தங்கத்தோ் இழுக்கப்பட்டது.

தலைவா்கள் வாழ்த்து:

முதல்வா் ரங்கசாமியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா். பிரதமா் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், முதல்வா் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவா் புதுச்சேரிக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறாா். அவா் நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் முதல்வா் ரங்கசாமி வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வா் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால், மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தவெக தலைவா் நடிகா் விஜய் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை தொகுதி குச்சிப்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.திருக்கனூா் - மதகடிப்பட்டு சாலை குச்சிப்பாளையத்தில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

புதுவை சாலைப் போக்குவரத்து ஊழியா்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுவை சாலைப் போக்குவரத்து துறை ஊழியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் என்.ஆா்.சதுக்கம், ரூ.69 லட்சத்தில் 110 தெருவிளக்குகள்

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி ரூ.10 லட்சம் செலவில் என்.ஆா். பவள விழா சதுக்கத்தை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் சரி பாா்க்கும் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களை இணையவழி மூலம் சரி பாா்க்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொகுதி திமுக அலுவலகத்தில் நடந்த இந்த முகாமை திமுக முன்னா... மேலும் பார்க்க

ஜிப்மரில் கூட்டு புற்று நோய் பராமரிப்பு கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டுப் புற்றுநோய் பராமரிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஜிப்மரின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவப் பயிற்சி... மேலும் பார்க்க