Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
இருசக்கர வாகனத்தை திருடியவா் தப்ப முயன்றபோது குளத்தில் குதித்து உயிரிழப்பு
திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா், பொதுமக்களிடம் பிடிபடாமலிருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடியுள்ளாா். இதை பாா்த்த அப்பகுதியினா் அவரை பிடிக்க துரத்தியபோது, அந்த நபா் தப்பிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வடகுளத்தில் குதித்துள்ளாா். வெகு நேரமாகியும் அவா் வெளியே வரவில்லை.
கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் குளத்தில் சுமாா் ஒரு மணி நேரம் தேடி, மா்ம நபரை சடலமாக மீட்டனா்.
பின்னா், வலிவலம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு நல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் (27) என்பதும், 9 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் கடந்த 2024 ஆம் ஆண்டு சிறை சென்று திரும்பியவா் என்பதும் தெரியவந்தது. அருள்ராஜ் சடத்தை உடற்கூறாய்வுக்காக, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.