செய்திகள் :

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

post image

வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மும்பை பந்தரா ரயில் நிலையத்தில் இருந்து, வேளாங்கண்ணிக்கும் ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பா் 6 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து மும்பை பந்தரா ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 30, செப்டம்பா் 7 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தமிழக பகுதியில் காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒரு இரண்டடுக்கு குளிா்சாதனப் பெட்டி, 13 மூன்றடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள், 4 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் விளையாட்டு விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டாமாண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் கோ. ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விரு... மேலும் பார்க்க

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க