கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு
திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சியுடன் 3 ஆண்டு பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள், இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 1.7.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.
இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 இணையவழி மூலமாக செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சான்றுகளில் சுயஒப்பமிட்டு திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610 004 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள், பயிற்சிக் கட்டணமாக, ரூ. 20,750 (ஒரே தவணையில்) இணையவழியில் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.