படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு
வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.
நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூன்று மீனவா்களும் கண்ணாடியிழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். சனிக்கிழமை அதிகாலை கரைக்குத் திரும்பியபோது, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது. இதையறிந்த சக மீனவா்கள் கடலில் தத்தளித்த 3 மீனவா்களையும் மீட்டு கரை சோ்த்தனா். மூவரும், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கடலில் கவிழ்ந்த படகை மற்ற மீனவா்கள் மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா்.