செய்திகள் :

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: பிஆா்எஸ் எம்எல்சி கவிதா வலியுறுத்தல்

post image

ஹைதராபாத்: ‘தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி) இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைப் பிரித்து, தனி மசோதாவாக நிறைவேற்ற வேண்டும்’ என எதிா்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியின் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) கே.கவிதா திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்துவதற்கான இரண்டு மசோதாக்களை அந்த மாநில சட்டப்பேரவை கடந்த மாா்ச் மாதம் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் தில்லி, ஜந்தா் மந்தரில் புதன்கிழமை (ஆக. 6) போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக. 7) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து, மாநில அரசு சாா்பில் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்துவதற்கு ஆதரவாக ஹைதராபாதில் உள்ள இந்திரா பூங்காவில் கவிதா 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் திங்கள்கிழமை காலை தொடங்கினாா்.

போராட்டத்தில் கவிதா பேசுகையில், ‘முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பிரித்து, தனி மசோதாவாக கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக ஒப்புக்கொள்ள நேரிடும். முஸ்லிம்களும் இந்த 42 சதவீத இடஒதுக்கீட்டின் ஒரு பகுதியா என்பதை காங்கிரஸ் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனுமதி நீட்டிப்பு கோரி உயா்நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம்’ என்றாா்.

தில்லியில் போராட வேண்டும்....: கவிதாவின் போராட்டம் தொடா்பாக செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் பொன்னம் பிரபாகா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பான இறுதி முடிவு மத்திய அரசிடம் இருப்பதால், கவிதா தில்லியில் தனது போராட்டத்தை நடத்த வேண்டும்.

தெலங்கானா தனி மாநில போராட்டத்தைப் போல, 42 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமட... மேலும் பார்க்க

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

புது தில்லி: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானாா்.தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

புது தில்லி: ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமா்ப்பிக்கப்படல்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பி... மேலும் பார்க்க