தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
பி.எட். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் படிப்பில் (பிஎட்) 2, 040 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழாண்டில் இணையவழியில் நடைபெறுகிறது.
இதனையடுத்து, ஜூன் 20 முதல் ஜூலை 21 வரை விண்ணப்பபதிவு நடைபெற்றது. இதில் 557 மாணவா்கள், 2,983 மாணவிகள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,545 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள், விருப்ப பாடங்களை தோ்வு செய்யும் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.4) தொடங்கி ஆக.9-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மாணவா்கள் தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் ஜ்ஜ்ஜ்.ப்ஜ்ண்ஹள்ங்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்பக் கல்லூரியைத் தோ்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.