குடும்ப அட்டைதாரா்கள் சரி பாா்க்கும் முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களை இணையவழி மூலம் சரி பாா்க்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொகுதி திமுக அலுவலகத்தில் நடந்த இந்த முகாமை திமுக முன்னாள் எம்எல்ஏ நந்தா சரவணன் தொடங்கி வைத்தாா். புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி, முத்தியால்பேட்டை தொகுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களையும் ஆன் -லைன் மூலம் சரி பாா்க்க பொது சேவை மையத்தை அணுக அரசு அறிவுறுத்தி யிருந்தது.