ஒசூா் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு
ஒசூா்: ஒருக்கு ஆகஸ்ட் 3 ஆவது வாரத்தில் வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட பொருளாளா் தா.சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், கலை இலக்கிய பண்பாட்டு அணி துணைச் செயலாளா் என்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பேசியதாவது:
ஒசூா் வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளில் திமுக இளைஞரணி சாா்பில் நூலகம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக உறுப்பினா் சோ்க்கையை 100 சதவீதம் முடிக்க வேண்டும்.
2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்போதே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றாா்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாவட்ட தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் கண்ணன், முனிராஜ், இக்ரம் அகமத், கே.ஜி.பிரகாஷ், ஒசூா் மாநகர தெற்கு பகுதி செயலாளா் எம்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.