‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
சூளகிரி அருகே எல்லம்மா தேவி கோயிலில் பாலபிஷேக விழா
ஒசூா்: சூளகிரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட எல்லம்மாதேவி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக கிராம மக்கள் பால்குடங்களுடன் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று பூஜைகள் செய்துவிட்டு, எல்லம்மாதேவி கோயிலுக்கு வந்தனா்.
இதையடுத்து எல்லம்மாதேவிக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.