ஒசூா் தெற்கு திமுக பொறுப்பாளா் நியமனம்
ஒசூா் மாநகர தெற்கு பகுதி திமுக பொறுப்பாளராக எம்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து, அவா் வாழ்த்து பெற்றாா்.
அப்போது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சுமன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.