செய்திகள் :

Relationship: காதல் `ஆன் த வே வா?’ அப்போ இந்த 5 பாயிண்ட்ஸை செக் பண்ணிக்கோங்க!

post image

ங்கள் வாழ்க்கையில லவ் ஆன் த வே என்பது தெரிந்துவிட்டதா? அப்படியென்றால், நீங்கள் இந்த 5 விஷயங்களை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஜஸ்ட் உணர்வுபூர்வமாக மட்டுமில்லாமல், அறிவுபூர்வமாகவும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

காதல்
காதல்

உங்க வாழ்க்கையின் தற்போதைய நிலையில் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குத் தயாரா என்பதுதான் முதலில் யோசிக்க வேண்டிய விஷயம். மிகச் சரியான ஆளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் தவறான நேரத்தில் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தாலும் அது தவறாகவே முடியும். முதலில் நீங்கள் ’ஒரு புதிய ரிலேஷன்ஷிப்புக்குத் தயாரா’ என்பதை நன்கு யோசித்துவிட்டு, பின்னர் அடுத்தகட்டத்துக்குத் தொடருங்கள்.

இரண்டாவது விஷயம்; முக்கியமான விஷயம். இருவருக்கும் ஒருவர் மீது காதல் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் ஈர்ப்பு மட்டுமே இருந்தால் அந்த ரிலேஷன்ஷிப் நீடிக்காது என்பதைத் தாண்டி கசப்பான அனுபவங்களையே அது தரும். போலவே, ஒருவருக்கு மட்டும் காதல் இருந்து, இன்னொருவர் பரிவின் காரணமாகவோ இரக்கத்தின் காரணமாகவோ ரிலேஷன்ஷிப்புக்கு சரியென்றால் அதுவும் நீடித்திருக்காது. நீடிக்காது என்பதைவிட ஒவ்வொரு நாளுமே அது பிரச்னையில் முடியும் வாய்ப்புகளே அதிகம்.

சில காரணங்களால் காதல் இல்லாமலும் இருவர் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையலாம். அது விதிவிலக்கு. அங்கேயும் யாரோ ஒருவர் காயப்படவே வாய்ப்புகள் அதிகம். காதல் என்பதைத் தாண்டி இன்னும் சில விஷயங்களும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்புக்கு வேண்டும். அது நம்பிக்கையும் பரஸ்பரம் மரியாதையும். அவை இல்லாத உறவும் கஷ்டத்தையே கொடுக்கும்.

காதல்
காதல்

இந்த உலகில் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்கவே முடியாது. அதனால், உங்கள் இணை உங்களை உங்கள் இயல்போடு ஏற்றுக்கொள்பவரா என்பது அவசியம். அதேபோல, நீங்களும் அவரை அவர் இயல்போடு ஏற்கிறீர்களா என யோசித்துக் கொள்ளுங்கள்.

வயது, சூழல் எனப் பல காரணிகளைப் பொறுத்து இது மாறும். ஆனால், உங்கள் மெச்சூரிட்டிக்கு உங்கள் பார்ட்னர் பொருந்துகிறாரா என்பதைப் பார்ப்பது மிக முக்கியம். எந்த வயதிலும் காதல் வரலாம்; என்ன வயது வித்தியாசம் இருந்தாலும் வரலாம். மொழி, நிறம் என எது வேண்டுமென்றாலும் வித்தியாசப்படலாம். ஆனால், மெச்சூரிட்டி அளவில் பொருந்திப் போகவில்லையென்றால் சிக்கல்தான். சந்தோஷ் சுப்ரமணியம் பட ஹாசினி & சந்தோஷை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த எதிரெதிர் இயல்பு நிச்சயம் ஈர்க்கும். ஆனால், சேர்ந்து வாழும்போது `நீ ஏன் இப்படிக் குழந்தையாட்டமே இருக்க' என சந்தோஷ் கோவப்படுவது போலத்தான் ஆகும்.

காதல்

இதற்கு அர்த்தம், ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து காதல் வருமென்றோ, ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்ல வேண்டுமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால், நாம் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையும்போது, அந்த உறவு எப்படி அமையுமென்ற ஐடியா நமக்கிருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டு ஏமாற நேரிடும். அந்த ஏமாற்றமே நமக்கு எல்லா பிரச்னைகளையும் கொண்டு வரும். அந்த ஏமாற்றங்கள் பட்டியலில் வரும் நிறைய விஷயங்களுக்குப் பொருளாதாரம் காரணமாக இருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலை. ஒருவரிடம் பணம் அதிகமாக இருக்கிறதென்பதை வைத்து `யெஸ்' சொல்லலாம் எனச் சொல்லவில்லை. ஆனால், அவருடனான ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்க முடியும் என்ற புரிதல் அவசியமென்கிறேன்.

இந்த 5 தவிர இன்னும் நிறைய இருக்கின்றன. நீங்கள் இருவரும் மதிக்கும் விஷயங்கள் என்ன (Values), வாழ்க்கையில் உங்கள் இருவருக்கும் இருக்கும் லட்சியங்கள் என்ன, எந்த ஊரில் இருவரும் வாழ்கிறீர்கள் உள்பட உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தோன்றலாம். அத்தனையையும் பட்டியிலிட்டுக் கொள்ளுங்கள். அவற்றுக்கு உங்களாலே பதில் அறிய முடிந்தவற்றை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னரிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டியதை அப்படிப் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாக கன்வின்ஸ் ஆன பின்னரே அந்த ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்லுங்கள்.

எந்தக் கட்டாயத்தின் பேரிலும் ஓர் உறவுக்கு ஓகே சொல்வது ஸ்மார்ட் ஆன செயலாகாது. உங்கள் வாழ்க்கை உங்கள் உரிமை. அதைக் கொஞ்சம் கவனமாகச் செய்யுங்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Relationship: முதல் சண்டை எப்போது வரும்; சண்டைக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

எந்த ரிலேஷன்ஷிப்பும் சந்தோஷங்கள் மட்டுமே நிறைந்தது கிடையாது. 5 வருடங்களுக்கு முன்பிருந்த நாமே இப்போது மாறியிருக்கிறோம்.10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ரசித்த, மதித்த, விரும்பிய விஷயங்கள் எல்லாவற்றையும் இப... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை: பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது தான் உண்மையா..?

குடும்ப வன்முறை... இந்தியாவில் இதை சந்திக்காத பெண்கள் குறைவு என்பது எத்தனை அவமானகரமான விஷயம்..? சில பெண்கள் பிறந்த வீட்டில்கூட குடும்ப வன்முறையை சந்திக்க நேரிடலாம். ஆனால், இந்த அலசல் கட்டுரை புகுந்த வ... மேலும் பார்க்க

Relationship: நிஜமாவே காதலிக்க நேரமில்லையா 2 K கிட்ஸுக்கு..?

2 கே கிட்ஸும் கால் நூற்றாண்டை தொட்டுட்டாங்க. அவங்களும் லவ், மேரேஜ்னு அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் கட்டங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. ரிலேஷன்ஷிப் தொடர்பா அவங்களோட ஒரு பிரச்னையைப் பற்றி மெள்ள மெள்ள பேச ... மேலும் பார்க்க

"கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும்!” - முதியோர் இல்லத்தில் 70 வயதில் காதல் திருமணம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 70 வயது முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70... மேலும் பார்க்க

Relationship: வளர்ந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பிரிவு; பெற்றோர் பாசிட்டிவாக கடப்பது எப்படி?

அம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் சரி, தந்தையின் மடியில் படுத்து... செல்லமாய் சிணுங்கி... அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளாக இருந்தாலும் சரி, மேல்படிப்பு, வேலை, திருமணம் எ... மேலும் பார்க்க