செய்திகள் :

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

post image

கரூர்: கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு, அடுத்த நாளில் ஆடி 19ம் தேதியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

வழக்கம்போல, இந்த ஆண்டும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

ஆடி மாதம் 1ம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு 18 நாள்கள் கழித்து, இன்று(ஆக. 4) நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிக்காக ஆண்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியில் இருந்து கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.

இன்று காலை 9.10 மணியளவில் கோயில் பாரம்பரிய பூசாரி, மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்த பின்பு, மேல தாளம் முழங்க, ஆணிகள் பொருத்தப்பட்ட பாத அணி மீது நின்று அருளோடு கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அருளோடு அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் சாமியை அழைத்தனர்

இந்நிகழ்ச்சியைக் காண சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, தேனி, மதுரை, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை டிஎஸ்பி தலைமையில் 100க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஆணவக் கொலை: கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்!

Devotees pay their vows by breaking coconuts on their heads at the Sri Mahalakshmi Temple.

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

சின்ன திரை நடிகை ஜீவிதா குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். வழக்கமாக நண்பர்களுடன் இருக்கும் நாள்களை புகைப்படங்களாக பதிவிடும் ஜீவிதா, பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார். ... மேலும் பார்க்க

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற ஊர்வசி தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது ... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் ... மேலும் பார்க்க

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

கயல் தொடர் நாயகி சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சின்ன திரை நடிகைகளில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி, கன்னட தொடர... மேலும் பார்க்க

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத் தொடரின் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் (பத்து அவதாரங்கள்) ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து கடந்த ஜூன் 25 ஆம் தே... மேலும் பார்க்க

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நகைச்சுவை நடிகர்கள் கோபி, சுதாகர் இணைந்து நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் ... மேலும் பார்க்க