திமுக: "விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசுவது, அன்புமணிக்கு நல்லது" - அமைச்சர...
அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!
ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்த 114 வயதான ஷிகேகோ ககாவா மிகவும் வயதானவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
114 வயதான மியோகோ ஹிரோயாசுவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாப்பானில் வாழும் வயதான நபராக ஷிகேகோ ககாவா மாறியுள்ளார் என சுகாதாரம் தொழிலாளர் மற்றும் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற ஷிகேகோ, போரின்போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக தனது குடும்பத்தின் மருத்துவமனையை நடத்தினார். தனது 86 வயதில் மருத்துவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
109 வயதில் டோக்கியோவில் 2021 ஜோதி தொடர் ஓட்டத்தின்போது ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வயதான ஜோதி ஏந்தியவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
2023ல் ககாவாவிடம் தனது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்துக் கேட்டபோது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் தினமும் விளையாடுகிறேன், என் சக்திதான் என்னுடைய மிகப்பெரிய சொத்து. எங்கு வேண்டுமானாலும் செல்கிறேன், நான் விரும்பியதைச் சாப்பிடுகிறேன், நான் விரும்புவதைச் செய்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக ஜப்பானில் அதிக வயதான நபராக இருந்தவர் ஹிரோயாசு(113). 1911இல் பிறந்த இவர் டோக்கியோவில் கலை பயின்றவர். ஓய்டா மாகாணத்தில் முதியோர் இல்லத்திலிருந்த அவர் செய்தித்தாள்களைப் படிப்பது, ஓவியம் வரைவது, சீட்டாட்டம் விளையாடுவது போன்றவற்றில் தனது நாள்களைக் கழித்தார். ஆரோக்கியமாக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் தனது 113 வது பிறந்தநாளில் கூறினார். முதியோர் இல்லத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஜப்பானில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சரிவு இருந்தாலும், முதியோர் மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 1, 2024 நிலவரப்படி 36 மில்லியன் மக்கள் தொகையில் 29 சதவீதம் - 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இது உலகின் மிக உயர்ந்த முதியோர் விகிதமாகும்.
உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்படி, தற்போது மக்கள் தொகையில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர். நாடு முழுவதும் 95,119 பேர் நூறு வயதுடையவர்கள் எனத் தெரிவித்துள்ளது.