எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேச...
Eng vs Ind : 'இதயத்துடிப்பை எகிற வைத்த 18 நிமிடங்கள்; ஓவலில் இந்திய அணி திரில் வெற்றி!'
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட்டை இந்திய அணி திரில்லாக வென்றிருக்கிறது. அதுவும் கடைசி விக்கெட்டுக்கு உடைந்த கையோடு வோக்ஸ் இறங்க, அவரோடு கூட்டணி சேர்ந்து அட்கின்சன் ஆடிய அந்த 18 நிமிடங்கள் பரபரப்பின் உச்சக்கட்டத்துக்கே சென்றது. இறுதியில் அட்கின்சனை சிராஜ் க்ளீன் போல்டாக்க இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஓவல் டெஸ்ட்டுக்கு முன்பாக நடப்புத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க, ஓவல் டெஸ்ட்டை வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருந்தது.
சரியான போட்டி..!
இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. கடந்த நான்கு போட்டிகளை விடவும் இந்த பிட்ச் பௌலிங்குக்கு நன்றாக ஒத்துழைத்திருந்தது. இதனால் இந்திய அணியின் பேட்டர்கள் தடுமாறினர். இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு இங்கிலாந்து அணி பெரிய லீடை எல்லாம் எடுக்கவில்லை. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே எடுத்தது.

முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. ஜெய்ஸ்வால் சதத்தோடு தொடங்கி வைத்தார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் ஆகியோர் அரைசதம் அடிக்க இந்திய அணி 396 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு. ரூட்டும் ப்ரூக்ஸூம் சதமடிக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கையிலிருந்து போட்டி நழுவி சென்றது.
பிரஷித் கிருஷ்ணாவும் சிராஜூம் சேர்ந்து மிரட்டலாக பந்துவீசி இந்திய அணியை போட்டிக்குள் கொண்டு வந்தனர். கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 4 விக்கெட்டுகள் இருந்தது. மீண்டும் சிராஜூம் பிரஷித்தும் அட்டகாசமாக வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
திக்... திக்...திக்!
அதிலும் கிறிஸ் வோக்ஸ் உடைந்த கையோடு பேட்டிங் ஆட வந்தார். அவரை ஒரு முனையில் வைத்துவிட்டு அட்கின்சன் சிக்சரெல்லாம் பறக்கவிட்டார். போட்டி பரபரப்பின் உச்சத்துக்கு சென்றது. இறுதியில் சிராஜ் அட்கின்சனை க்ளீன் போல்டாக்க இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் 2-2 என சமன் செய்திருக்கிறது. விராட், ரோஹித், அஷ்வின் என சீனியர்கள் இல்லாமல் சென்ற இந்திய அணி இத்தனை சிறப்பாக ஆடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த இளம் இந்திய அணி எதிர்பாராததை நிகழ்த்தியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...