செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

post image

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டணங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் மிகப் பெரிய இடையூறு சந்தித்து வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.21 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.70 ஐ தொட்ட நிலையில், முடிவில் 52 காசுகள் சரிந்து ரூ.87.70-ஆக முடிவடைந்தது.

இன்றைய வர்த்தக அமர்வின் முடிவில், இந்திய ரூபாய் 52 காசுகள் சரிந்து 87.70 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 02) அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.87.18 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

The rupee depreciated 52 paise to close at 87.70 against the US dollar

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 4) அறிமுகமானது. ஸ்நாப்டிராகன் 4 மற்றும் 6000 mAh பேட்டரி திறன் கொண்டதால், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விவோ ஒய் 4... மேலும் பார்க்க

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 419 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 157.40 புள்ளிகள் உயர்ந்து 24,722.75 புள்ளிகளாக நிறைவட... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக. 4) பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,765.83 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.35 மணியளவில... மேலும் பார்க்க

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று... மேலும் பார்க்க

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: மர பூச்சு பொருட்கள் உற்பத்தியாளரான சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா, முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.14.20 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு லாப... மேலும் பார்க்க

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) வீடுகள் விற்பனை அளவு 5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் மதிப்பு அடிப்படையில் அது 9 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து ம... மேலும் பார்க்க