செய்திகள் :

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

post image

ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த ஷிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்த ஷிபு சோரன் ஜார்க்கண்ட் என்ற இந்திய மாநிலம் உருவாவதிலும் அதன் வளர்ச்சியிலும் அசைக்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவராகப் போற்றப்படுகிறார்.

இந்தநிலையில், வயது முதிர்ச்சியால் உடல் நலம் குன்றி கடந்த ஜூன் 19-ஆம் தேதி தில்லியிலுள்ளதொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிபு சோரன் இன்று(ஆக. 4) காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார். அவருக்கு வயது 81.

அன்னாரது மறைவைத் தொடர்ந்து அன்னாருக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஜார்க்கண்ட் முதல்வரும் மறைந்த ஷிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள உருக்கமான இரங்கல் பதிவில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் பழங்குடியின மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு நிழலைப் போலத் திகழ்ந்தவர் ஷிபு சோரன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: அவர் தமது இறுதிமூச்சு வரை போராடினார். ஆனால், இன்று, அந்த நிழல் மறைந்துவிட்டது. அவரை எப்போதும் நாம் நினைவில் கொண்டிருப்போம். ஒரு சிறந்த மனிதன் நம்மிவிட்டு நீங்கிவிட்டார்’ என்றார்.

Shibu Soren was protective shade for Jharkhand, tribals: Hemant Soren

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

மும்பையில் டெஸ்லாவின் முதல் சார்ஜிங் நிலையம்!

மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்த... மேலும் பார்க்க

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்த... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அ... மேலும் பார்க்க

சீன ஆக்கிரமிப்பு: 2019-ல் பாஜக எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019லேயே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீ... மேலும் பார்க்க

ஐடி நிறுவன சிஇஓ-க்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்சிஎல் டெக்(HCL Tech) நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் இருந்தார்.அவரது மொத்த ஆண்டு வருமாணம்... மேலும் பார்க்க