வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
தனித்துவமான சாதனை
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடர்களின் கடைசிப் போட்டியில் இதுவரை வென்றதில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று தனித்துவமான சாதனை படைத்துள்ளது.
கடைசி டெஸ்ட்டில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!