Seeman: "கிங்டம் திரைப்படத்தை நிறுத்துங்கள்; திரையரங்கை முற்றுகையிடுவோம்" - சீமா...
தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நாளை(ஆக. 5) அறிவிக்கவுள்ளார்.
வரும் ஆக. 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டுத் தேதியை மாற்ற வேண்டும் என காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரியும், காவல்துறை பாதுகாப்புக் கேட்டும் தவெக சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவையடுத்து, தவெகவின் மதுரை மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? மாநாட்டு மேடையின் அளவு என்ன? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் காவல் துறை தரப்பில் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.