Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ...
கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!
கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக்கப்பட்ட தனி நபர் ஆணையம் விரிவான ஆய்வறிக்கையை இன்று(ஆக. 4) கர்நாடக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்துள்ள 1,766 பக்க ஆய்வறிக்கையில் உள்ஒதுக்கீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டியலினப் பிரிவில் உள்ள 101 சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்பட்டு வரும் தீவிர கோரிக்கைக்கு ஆகஸ்ட் 4, 2025-இல் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்த தனி நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி நாகமோகன் தாஸ், “ஒட்டுமொத்த தரவுகளையும் ஆராய்ந்த பின், கர்நாடக அரசுக்கு இந்த ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. சுமார் 1,766 பக்கங்களை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கை இது. கைப்பேசி செயலி வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பட்டியலின சாதிப் பிரிவுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதே நெடுங்காலமாக என்னுடைய விருப்பமாக இருந்து வந்தது. இதையே நான் அரசிடம் பரிந்துரைத்துள்ளேன்” என்றார்.