செய்திகள் :

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

post image

அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகளில் நலன் கருதி, சுற்றுலா தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனையொட்டி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 வீரர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

Heavy rain warning Schools in the Nilgiris to be closed tomorrow

நடிகை மீரா மிதுன் கைது!

தில்லியில் நடிகை மீரா மிதுனை காவல் துறையினர் இன்று (ஆக. 4) கைது செய்தனர். பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்... மேலும் பார்க்க

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் என்ற கமல் ஹாசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. கமல் என்ன சொன்னார்?"சர்வாதிகாரச் சநாதனச் சங்கிலிகளை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் கல்வியே" என்று ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(எஸ்எஸ்சி) தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 ஆம் ... மேலும் பார்க்க