Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ...
சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!