செய்திகள் :

Dhoni : 'பச்சை சிவப்பு பட்டன் போன் மட்டும் யூஸ் பண்ணுங்க; மனுசங்களோட நிறைய பேசுங்க' - தோனி

post image

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.

தோனி
தோனி

தோனி பேசியதாவது, 'போனில் பேசுவது அத்தனை சௌகரியமாக இருக்காது. எனக்கு ஒருவருடன் பேசும்போது அவரின் உணர்வுகள் என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஒருவரை நேரில் பார்க்கும் போது நாம் பேசவில்லையென்றாலும் உணர்வுகளின் மூலம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். போனில் அது முடியாது.

வேண்டுமானால் பழைய போனை மட்டும் பயன்படுத்துங்கள். சிவப்பு பட்டனும் பச்சை பட்டனும் மட்டும் இருக்குமே அந்த போனை பயன்படுத்துங்கள்.

தோனி
தோனி

தோல்விகள்தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். விஷயங்களை கற்றுக்கொள்ள நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எதிரணியினர் செய்யும் தவறுகளிலிருந்து கூட நான் பாடம் கற்றுக்கொள்வேன்.

நிறைய புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். உங்களின் கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் நிறைய அனுபவங்களை பெற முடியும்.

வாழ்க்கை அழகானது. சக மனிதர்களிடம் உரையாடுங்கள். உங்களின் சக பணியாளர்களிடம் 'வாழ்க்கை எப்படி போகிறதென வினவுங்கள். அப்படி செய்தால் உங்களின் கடினமான காலத்தில் அவர் அதே விஷயத்தை உங்களுக்கும் செய்வார்.' என்றார்

Dhoni : 'இன்னும் 5 சீசன் ஆடுற அளவுக்கு கண்ணு நல்லா இருக்கு; ஆனா...' - தோனி வைக்கும் ட்விஸ்ட்

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தோனி கலந்துகொண்டிருந்தார். அதில், உடல் நலன் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினார். குறிப்பாக, கண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவரின் ஓய்வ... மேலும் பார்க்க

Dhoni : 'ரிட்டையர் ஆகுறதுக்குன்னு ஒரு வயசு இருக்கு சார்!' - ஓய்வு குறித்து தோனி கொடுத்த அப்டேட்!

சென்னையில் நடந்த 'Maxivision' என்கிற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு கிரிக்கெட் சார்ந்து சில முக்கியமான விஷயங்... மேலும் பார்க்க

வெறுப்பரசியலுக்கு இரையாக்கப்படும் விளையாட்டு போட்டிகள் - இதுதான் உங்க தேசப்பற்றா?

'புறக்கணித்த இந்தியா!'ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான 'World Championship of Legends' என்ற தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆட வேண்டும். ஆ... மேலும் பார்க்க

`தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் வீராங்கனைகளுக்கு SRY மரபணு சோதனை கட்டாயம்' - தடகள கவுன்சில் முடிவு

உலகளாவிய தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் போட்டியிட, வீராங்கனைகள் SRY மரபணு சோதனையில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாம் என்று உலக தடகள (World Athletics) கவுன்சில் அறிவித்துள்ளது.2025-ம் ஆண்டுக்கான உலக தடகள ... மேலும் பார்க்க

MS Dhoni: கில்லர் லுக்கில் மஹேந்திர சிங் தோனி - வைரலாகும் புகைப்படங்கள் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Eng vs Ind: "எனக்கு வருத்தம்தான்" - இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை; காரணம் என்ன?

'ஸ்டோக்ஸ் இல்லை..'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அ... மேலும் பார்க்க