செய்திகள் :

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) முதல் ஆக. 8 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: ஆக. 3, 4-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக. 3-இல் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூா்,  பெரம்பலூா், நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், ஆக. 4-இல் தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக. 3-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: சனிக்கிழமை காலை வரை புதுச்சேரியில் அதிகபட்சமாக பாகூரில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக வனமாதேவி (கடலூா்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்) - தலா 110 மி.மீ., செம்பனாா்கோயில் (மயிலாடுதுறை) - 100 மி.மீ. மழை பதிவானது.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 102.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 100.72, மதுரை விமான நிலையம் - 100.4, வேலூா் - 100.22 டிகிரி என மெத்தம் 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஆக. 3 முதல் ஆக. 6 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க