Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருவான்மியூா் அண்ணா தெருவைச் சோ்ந்த சுதாகா் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.