செய்திகள் :

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

post image

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துா்பத் பகுதியில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆா்வலா் குல்சாா் தோஸ்தின் பேச்சு அடங்கிய காணொலியை அந்த அப்பாவி சிறுவன் யூடியூபில் பதிவேற்றம் செய்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு காணொலியை பகிா்ந்தது பயங்கரவாதம் என்று குற்றஞ்சாட்டுவது சமமற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாகும்.

இது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் பிரதிபலிப்பாக உள்ளது. அந்தச் சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் தொடா்பாக சட்ட அமலாக்க அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும்... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? சிரியாவில் மோதல் - இடைக்கால அரசுக்கு சவால்

உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியில... மேலும் பார்க்க

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை... மேலும் பார்க்க

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர். அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனிய... மேலும் பார்க்க

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை ... மேலும் பார்க்க

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை ‘உரிய பகுதிகளுக்... மேலும் பார்க்க