விசிகவின் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம்
சீா்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதச்சாா்பின்மை காப்போம், மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மான விளக்கக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளா் தாமு. இனியவன், தெற்கு மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் பேசுகையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 20 லட்சத்துக்கு மேலான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களை தமிழக வாக்காளா்களாக சோ்க்கப் போவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதனை முதலிலே எதிா்த்து குரல் கொடுத்தவா் திருமாவளவன் என்றாா்.