பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!
கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்டத்திற்கு நிதி வழங்கல்
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில், மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு உறுப்பினா் கடன் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளரும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், சிறப்பு உறுப்பினா் கல்வித் திட்டத்தில், மயிலாடுதுறை மண்டலம் சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதியாக ரூ.1 கோடி, கூட்டுறவு நிறுவன உறுப்பினா் ஆண்டு சந்தாவாக ரூ.1,20,000 மற்றும் கூட்டுறவு இதழ் ஆண்டு சந்தா ரூ.40,500 என மொத்தம் ரூ.1,01,60,500-க்கான காசோலை வழங்கப்பட்டது.