செய்திகள் :

`ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்’ - ராகுல் காந்தியை சாடிய உச்ச நீதிமன்றம்

post image

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் `பாரத் ஜோடோ’ எனப்படும் ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்தார். அப்போது கடந்த 2022 டிசம்பர் மாதம் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, `இந்திய சீன எல்லை பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது.

குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகள் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். ஆனால் அவர்களை தடுக்க பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருக்கிறது. அதை தடுக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

ராகுல் காந்தி - மேதா பட்கர்

இந்த பேச்சுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லக்னோ கீழமை நீதிமன்றத்தில் வழக்கானது நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக கீழமை நீதிமன்ற நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.  

இந்த சம்மனுக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  வந்தது.

அப்போது எடுத்த உடனேயே ராகுல் காந்தியை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதிகள், ``இந்தியாவின் நிலப்பரப்பை 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என ராகுல் காந்திக்கு எப்படி தெரியும்? இதற்கான வலுவான ஆதாரங்கள் அவரிடம் இருக்கிறதா? பொறுப்பான ஒரு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இதை நாடாளுமன்றத்தில் பேசாமல் பொதுவெளியில் பேசுவது ஏன்? சமூக ஊடகங்களில் இது தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது ஏன்?” என கேள்விகளை எழுப்பினார்கள்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்!

அது மட்டும் இல்லாமல், `ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்’ எனவும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர். அதற்கு ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ``ஒருவரை இப்படியான அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து தொடர்ச்சியாக துன்புறுத்துவதை ஏற்க முடியாது” என கூறினார்

 அதற்கு கடுகடுப்பான முகத்துடன் பேசிய நீதிபதிகள், ``உங்களுக்கு அரசியல் சாசனம் பேச்சுரிமை வழங்கியிருக்கிறது. ஆனால் அதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்காதீர்கள்” என கூறினர்.

பிறகு லக்னோ நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஓரணியில் தமிழ்நாடு’ OTP விவகாரம்: `அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?' திமுக மனு தள்ளுபடி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக மேற்கொண்டு வந்த... மேலும் பார்க்க

`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட... மேலும் பார்க்க

Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட மேலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது . அப்பொழுது புனித ரம்ஜான் மாதம... மேலும் பார்க்க

`வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை' - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்க... மேலும் பார்க்க

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்று... மேலும் பார்க்க