வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!
Shashi Thaoor: ``விராட் கோலியை இந்த போட்டியில்தான் அதிகமாக மிஸ் செய்கிறேன்'' - சசி தரூர் விமர்சனம்
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகள் வென்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
5-வது போட்டியின் இறுதி நாள் இன்று. இதில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும்.

சேசிங் செய்யும் இங்கிலாந்து அணி இன்று 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று களமிறங்குகிறது. இதுவரை 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இந்திய அணி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெற்றிபெறும்.
இந்தியாவின் லெஜண்டரி வீரர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளதால், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியது அணி. இந்தியா தொடரை சமன் செய்யக் கூட மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ள நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை மிஸ் செய்வதாகப் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.
I’ve been missing @imVkohli a few times during this series, but never as much as in this Test match. His grit and intensity, his inspirational presence in the field, not to mention his abundant batting skills, might have led to a different outcome. Is it too late to call him out…
— Shashi Tharoor (@ShashiTharoor) August 3, 2025
"இந்த தொடரில் சிலமுறை நான் விராட் கோலியை மிஸ் செய்தேன், ஆனால் இந்த போட்டியில்தான் மிக அதிகமாக மிஸ் செய்கிறேன்.
அவரது மன உறுதியும் தீவிரமும், களத்தில் அவரது உத்வேகமூட்டும் இருப்பும், பேட்டிங் திறமையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை எல்லாமும் இருந்திருந்தால் வேறுவிதமான முடிவு கிடைத்திருக்கும்.
ஓய்விலிருருந்து திரும்பவருமாறு அவரை அழைக்க அதிக தாமதமில்லை என நினைக்கிறேன். விராட், இந்த நாட்டுக்கு நீங்கள் தேவை!" எனப் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர் எனபதை அவரது நாடாளுமன்ற உரைகள் மூலமே அறிய முடியும். கிரிக்கெட்டை உவமையாக வைத்து அரசியலை விளக்குவார்.
இந்தியா - பாகிஸ்தான் கிர்க்கெட் தொடர்பான Shadows Across the Playing Field என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் கூட. ஐபிஎல் முதல் உலகக் கோப்பை வரை ஒவ்வொரு தொடரையும் கவனிப்பவர், இந்திய அணியின் நேர்மையான ஆதரவாளர்!