திமுக: "விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசுவது, அன்புமணிக்கு நல்லது" - அமைச்சர...
நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!
சின்ன திரை நடிகை ஜீவிதா குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
வழக்கமாக நண்பர்களுடன் இருக்கும் நாள்களை புகைப்படங்களாக பதிவிடும் ஜீவிதா, பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார்.

நண்பர்கள் ஏற்பாடு செய்யும் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்களை சமூகவலைதளங்களில் பதிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையாகப் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக ஜீவிதாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஜீவிதா. ஆரம்பக்கட்டத்தில் சிங்கப் பெண்ணே தொடரில் சிறிய பாத்திரத்தில் நடிப்பதற்காக நேர்முகத் தேர்வில் தேர்வான நிலையில், அதீத திறமையால் சிறிது நாள்களிலேயே புதிய தொடருக்கு நாயகியானார்.
கோவையைச் சேர்ந்த ஐடி துறை ஊழியரான இவர், நடிப்பதற்கு வந்தபோது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது நடிப்பின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக சின்ன திரையில் நுழைந்து, தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் ஜீவிதா, தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் எளிமை, அமைதி, அன்புகள் நிறைந்த பிறந்தநாள் கொண்டாட்டம். இது குடும்பத்திற்கான நேரம் எனப் பதிவிட்டுள்ளார்.
தனது பிறந்தநாளை குடும்பத்துடன் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளதை, சில சிறிய பரிசுகளுடனும், கைப்பட வீட்டில் செய்த கேக் உடனும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!