செய்திகள் :

நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

post image

முதலீட்டாளர்கள் மாநாட்டில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிறப்பு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்இன்று(ஆக. 4) முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி பகுதியை “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக” உருவாக்கும் வகையில், பல்வேறு பசுமை ஹைட்ரஜன், சோலார் செல் உள்ளிட்ட உற்பத்தி திட்டங்களை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். 

இப்போது கூட வின்ஃபாஸ்ட் உற்பத்தியை தொடங்கி வைத்துவிட்டுதான், இந்த மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பான நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் வளர்ச்சிக்காக 4 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். 

முதல் அறிவிப்பு - தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

இரண்டாவது அறிவிப்பு - கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும்.  அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.  

மூன்றாவது அறிவிப்பு - முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.

நான்காவது அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

கோவை: தன்னுடைய நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று திரைப்படம் ஒன்றில் வடிவேல் காமெடி செய்திருந்தார். அந்தக் காமெடி போன்று கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இல்லாத ... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை(ஆக. 5) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருக... மேலும் பார்க்க

கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்... மேலும் பார்க்க

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவமனை... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு... மேலும் பார்க்க