செய்திகள் :

மேற்கு வங்கம்: "மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்" - பாஜக குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

post image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு, அம்மாநிலத்தின் கடற்கரை நகரமான திகாவில், 22 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான ஜெகநாதர் கோயிலைக் கட்டிமுடித்தது.

மேற்கு வங்க வீட்டுவசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (HIDCO) கட்டப்பட்ட இந்தக் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

`மம்தா பானர்ஜி இந்தக் கோயிலை அரசியல் ஆதாயங்களுக்காக, குறிப்பாக இந்து வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் கட்டியிருக்கிறார்' என பா.ஜ.க உள்ளிட்ட மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.

ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்
ஜெகநாதர் கோயில்

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "கோயில்களுக்கு துர்கா பூஜைக்காக ரூ.1.1 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும்" என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கும் பா.ஜ.க கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மேற்கு வங்க மாநில பா.ஜ.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்னிமித்ரா பால், ``திரிணாமுல் காங்கிரஸ் அரசு வளர்ச்சிப் பணிகளைப் புறக்கணித்து, பொது நிதியை நன்கொடையாக விநியோகிக்கிறது. கோயில்களைக் கட்டுவதும், மத விழாக்களுக்கு மானியங்களை வழங்குவதும் ஒரு அரசின் முதன்மை நோக்கமாக இருக்கக்கூடாது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதுபோன்ற நடவடிக்கைகள், அரசு தனது முன்னுரிமைகளை மாற்றுவதைக் காட்டுகிறது. சாலைகளை அமைப்பதற்கும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறார்.

இந்து வாக்குகளுக்காக ஜெகன்னாதர் கோயிலைக் கட்டி முடித்திருக்கிறார். இதை உதாரணமாகக் காட்டி, மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டும் என்று கோரக்கூடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

TVK : 'கறார்' காட்டும் காவல்துறை; விஜய்யின் மாநாடு தேதியில் மாற்றம்? - பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

வங்காள மொழி: `பொருத்தமான பதிலடி கொடுக்காமல் மம்தா பானர்ஜி கடந்து செல்லமாட்டார்' - முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரிக்க வங்காள மொழிப் பேசும் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேண்டும் என மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்... மேலும் பார்க்க

SIR எதிர்ப்பு: ராகுல் காந்தியின் முயற்சி To INDIA கூட்டணியின் திட்டங்கள் வரை! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் பீகார், அதன் பின்னர் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையம் 'வாக்காளர் பட்டியல்களின... மேலும் பார்க்க

ஓ.பன்னீர் செல்வம்: `கூட்டணி குறித்த முடிவு' - ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை!

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தபோது அவரைச் சந்திக்க நேரம் கேட்டும் மறுக்கப்பட்டதிலிருந்து, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அதிருப்தியில்... மேலும் பார்க்க