செய்திகள் :

TVK : 'கறார்' காட்டும் காவல்துறை; விஜய்யின் மாநாடு தேதியில் மாற்றம்? - பின்னணி என்ன?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

TVK Vijay
TVK Vijay

கடந்த ஜூலை 4 ஆம் தேதி தவெகவின் செயற்குழுக் கூட்டம் நடந்திருந்தது. அதில்தான் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தப்போகிறோம் என விஜய் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி மதுரையின் பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடந்திருந்தது. அன்றே மதுரை மாவட்ட எஸ்.பியிடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு அனுமதிக் கேட்டு மனுவும் கொடுக்கப்பட்டது.

தேதி மாற்றம்?

ஜூலை 15 ஆம் தேதியிலிருந்தே மாநாட்டுக்காக இடத்தை தயார்ப்படுத்தும் வேலைகளையும் தொடங்கியிருந்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் அனுமதி கொடுக்கப்படாமலேயே இருந்தது. மாநாட்டுக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்னென்ன? சிறப்பு விருந்தினராக யார் யார் வருவார்கள்? போன்ற கேள்விகளை காவல்துறை தவெக தரப்பிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கான விளக்கத்தை ஆனந்த் தரப்பிலிருந்து கொடுத்த பிறகும் அனுமதி வழங்குவதில் தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள்.

TVK Vijay
TVK Vijay

'விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதிலும் இப்படித்தான் தாமதப்படுத்தினார்கள். காவல்துறையின் தாமதத்தால் செப்டம்பரில் நடக்க வேண்டிய மாநாடு அக்டோபருக்கு தள்ளிப்போனது. இதோ இப்போது மதுரையிலும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி மாநாட்டியை முன்கூட்டியே நடத்துமாறு கூறுகிறார்கள்.

தொண்டர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தேதியை அறிவித்து வேலையைத் தொடங்கினோம். தேதியை மாற்றுவதின் தொண்டர்களை அயர்ச்சியடைய செய்ய முடியும் என நினைக்கின்றனர். நிச்சயம் அது நடக்காது.' என்கிறார்கள் பனையூர் தரப்புக்கு நெருக்கமானவர்கள்.

'ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்திக்காக காவலர்களை முன்பே திட்டமிட்டு முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவிருப்பதால், 25 ஆம் தேதியும் முழுமையாக பாதுகாப்பு வழங்கமுடியாது. அதனால் 25 ஆம் தேதிக்கு முன்பாக வேறொரு தேதியை தேர்வு செய்யுங்கள் என காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.' என மதுரை தவெக நிர்வாகிகள் சேதி சொல்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

தேதி மாற்றம் குறித்து பனையூர் தரப்பு இன்னும் இறுதி முடிவை எடுத்ததாக தெரியவில்லை. காவல்துறையை அனுமதி அளிக்கக்கோரி நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்றும் அல்லது காவல்துறையின் அறிவுறுத்தல்படி, தேதியை மாற்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாநாட்டை நடத்தலாம் என இரண்டு ஆப்சன்களையும் பனையூர் தரப்பு யோசித்து வருகிறதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இதுசம்பந்தமான அறிவிப்பும் வெளியாகக்கூடும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேற்கு வங்கம்: "மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்" - பாஜக குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு, அம்மாநிலத்தின் கடற்கரை நகரமான திகாவில், 22 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான ஜெகநாதர் கோயிலைக் கட்டிமுடித்தது.மேற்கு வங்க வீட்டுவசதி உள்கட்டமை... மேலும் பார்க்க

வங்காள மொழி: `பொருத்தமான பதிலடி கொடுக்காமல் மம்தா பானர்ஜி கடந்து செல்லமாட்டார்' - முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரிக்க வங்காள மொழிப் பேசும் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேண்டும் என மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்... மேலும் பார்க்க

SIR எதிர்ப்பு: ராகுல் காந்தியின் முயற்சி To INDIA கூட்டணியின் திட்டங்கள் வரை! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் பீகார், அதன் பின்னர் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையம் 'வாக்காளர் பட்டியல்களின... மேலும் பார்க்க

ஓ.பன்னீர் செல்வம்: `கூட்டணி குறித்த முடிவு' - ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை!

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தபோது அவரைச் சந்திக்க நேரம் கேட்டும் மறுக்கப்பட்டதிலிருந்து, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அதிருப்தியில்... மேலும் பார்க்க