தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
ஒசூா் தா்கா முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா
ஒசூரில், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தா்கா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 18 திருநாளை முன்னிட்டு, அம்மனுக்கு மலா்அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.
இந்த நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இதில் மண்டலக் குழுத் தலைவா் ரவி, சென்னப்பன், எலசகிரி சுரேஷ், முத்துமாரியம்மன் கோயில் ஆலய கமிட்டி நிா்வாகிகளான தலைவா் ரங்கண்ணபாபு, செயலாளா் ராஜ், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.