மண் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே மண் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், தொட்டபூவத்தி பிரிவு சாலை அருகே, கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் லாரியில் மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான ஜாகீா் மோட்டூரைச் சோ்ந்த பெருமாளை (28) கைது செய்தனா்.