விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
Trending: உலகின் வயதான குழந்தை - எப்படி நிகழ்ந்தது இந்த அறிவியல் அதிசயம்? | விரிவான தகவல்கள்
அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..?

ஆய்வகத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து கருவாக்கி, அதை பல வருடங்கள் வரை உறைய வைப்பதும், குழந்தைப்பெற முடிவெடுத்தவுடன் அதை கருப்பையில் வைத்து வளர்த்து பிள்ளைப்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த அறிவியல்தான்.
அந்த வகையில், கடந்த 30 (1994) வருடங்களாக உறைய வைக்கப்பட்டிருந்த ஒரு கருவை, லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதி முறைப்படி தத்து எடுத்தனர். அதன்பிறகு, அந்தக்கரு லிண்ட்சே கருப்பையில் வைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி, உலகிலேயே வயதான அந்தக்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, கரு உறைய வைக்கப்பட்டதில் இருந்து கணக்கெடுத்தால் அந்தக்குழந்தைக்கு தற்போது 30 வயது.
இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தக்கரு உறைய வைக்கப்பட்ட வருடத்தில், தற்போது அதன் வளர்ப்புத் தந்தையாகியிருக்கும் டிம் பியர்ஸ் குழந்தையாக இருந்திருக்கிறார்.

30 வருடங்களுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட இந்தக் கருவின் உயிரியல் பெற்றோர், ஐ வி எஃப் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது 3 கருக்கள் உருவாக, அதில் ஒன்றை மட்டும் கருப்பையில் சுமந்து பெற்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு இப்போது 30 வயதாகிறது. அவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. மீதமுள்ள 2 கருவில் ஒன்றை, சில வருடங்கள் கழித்து குழந்தையாக பெற்றுக்கொள்ளலாம் என்கிற திட்டத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர்களுக்கு விவாகரத்து நடந்துவிட்டது.
மீதமிருந்த அந்த 2 கருவில், ஒன்று நிலையில் இருந்து மாற, மற்றொன்று ஆரோக்கியமாக இருந்திருக்கிறது. அந்தக் கருவை யாருக்கும் தத்துக்கொடுக்க உயிரியல் தாயான லிண்டா விரும்பவில்லை. அதற்குபதிலாக, கடந்த 30 வருடங்களாக எக்கச்சக்க டாலர் செலவழித்து உறைய வைக்கப்பட்ட கருவை பாதுகாத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதி, ஒரு கரு தத்தெடுப்பு அமைப்பின் மூலம், லிண்டாவின் அனுமதிபெற்று, அவருடைய உறைய வைக்கப்பட்ட கருவை தத்தெடுத்திருக்கிறார்கள். கரு லிண்ட்சேவின் கருப்பையில் வைக்கப்பட்டது. இதோ, குழந்தையும் பிறந்துவிட்டது.
உயிரியல் தாயான தாயான லிண்டா, 30 வருடங்களுக்கு முன்னால் என் மகள் பிறந்தபோது எப்படியிருந்தாளோ, அதேபோல இவனும் இருக்கிறான் என்றிருக்கிறார்.
பெற்றெடுத்த பெற்றோரோ, ’’இந்த விலைமதிப்பற்ற குழந்தையை பெற்றெடுத்ததில் நாங்கள் பிரமிப்பில் இருக்கின்றோம்’’ என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...