செய்திகள் :

Nilgiris: அரிசி, பருப்பு எல்லாமே காலி, இரவோடு இரவாக ரேஷன் கடையை முடித்த யானைகள்

post image

நீலகிரி மலையில் இயற்கையான வாழிடச் சூழல்களை இழந்துத் தவிக்கும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் நடமாடி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் முறையற்ற வகையில் கொட்டப்படும் உணவு கழிவுகளை உட்கொண்டு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.

ரேஷன் கடை சேதம்

குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளை சேதப்படுத்தி உள்ளே நுழையும் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தானியங்களை உட்கொண்டு செல்கின்றன்றன. இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதி ரேஷன் கடைக்குள் நேற்று இரவு நுழைந்த யானைகள் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு இரவோடு இரவாக ரேஷன் கடையை காலி செய்துள்ளன.

இது குறித்து தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள், " மேங்கோ ரேஞ்ச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. நேற்றிரவு ரேஷன் கடைக்குள் நுழைந்த யானைகள் மொத்தமாக காலி செய்தன‌‌. மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளைதைப்‌ போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரேஷன் கடைகளை கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நிறுவ வேண்டும்" என்றனர்.

ரேஷன் கடை சேதம்

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், "குறிப்பிட்ட ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையின் உதவியுடன் அவற்றைக் கண்காணித்து பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேங்கோ ரேஞ்ச் பகுதி மக்களுக்கு தேவையான குடிமைப் பொருள்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.

கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இரு... மேலும் பார்க்க

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்... மேலும் பார்க்க

Nilgiris: மழையால் பசுமை; மகிழ்ச்சியோடு பசியாறும் யானை கூட்டங்கள்.. கவர்ந்திழுக்கும் நீலகிரி மலை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான யானைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயரால் கடந்த 200 ஆ... மேலும் பார்க்க

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது. பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக... மேலும் பார்க்க