செய்திகள் :

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

post image

சென்னை: வங்க மொழியை வங்கதேச மொழி என தில்லி காவல்துறை குறிப்பிட்டிருந்ததற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தில்லி காவல்துறை எழுதிய கடிதம் ஒன்றில், வங்க மொழியை, வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். இது வங்க மொழியைப் பேசும் மக்களை அவமதிக்கும் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவை மேற்கோள்காட்டி, தில்லி காவல்துறையின் கடிதத்தைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை, வங்க மொழியை "வங்காள மொழி" என்று குறிப்பிட்டிருக்கிறது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி. இதனை தில்லி காவல்துறை அவமரியாதை செய்திருக்கிறது.

இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் மோசமான மனநிலையைத்தான் காட்டுகிறது.

இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மொழிக்கும் மாநில மக்களுக்கும் நிச்சயம் ஒரு கேடயமாக நிற்பார். இதற்கு ஏற்ற பதிலடியைக் கொடுக்காமல், இந்த விவகாரத்தை அவர் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல விடமாட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தக் கடிதம், தில்லி காவல்துறையால் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில், வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டுள்ளது காவல்துறை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று கேட்டு, காவல்துறை மேற்கு வங்க அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமான வங்கா பவனுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

தில்லி காவல்துறை, வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுகிறது. இது எவ்வளவு பெரிய தவறு. வங்க மொழி நமது தாய்மொழி. ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் பேசிய மொழி. நமது தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் எழுதப்பட்ட மொழி என்று கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், இது அரசியல் ஆதாயத்துக்காக மம்தா பானர்ஜி செய்யும் வேலை என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், சட்டவிரோதமாக, வங்கதேசத்தவர்கள், நாட்டுக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். மொழி மற்றும் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்றும் பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு... மேலும் பார்க்க

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழக்கமான விற்பனை திங்கள்கிழமை முதல் நட... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் மனைவியுடன் சேர்ந்து கூலித் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்க... மேலும் பார்க்க

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக ரூ.1,119... மேலும் பார்க்க

தங்கம் விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும் சவரனுக்கு ரூ.4... மேலும் பார்க்க

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மய... மேலும் பார்க்க