செய்திகள் :

சகோதரா்கள் மூவரைக் கொன்ற வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

post image

தட்டாா்மடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை கொன்ற வழக்கில் 4 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தட்டாா்மடம், இடைச்சிவிளையைச் சோ்ந்த மயிலையா மகன்கள் முருகேசன் (35), வயணபெருமாள் (48), ஆதிலிங்கராஜன் (27). சகோதரா்களான மூவரும், தங்களுக்குச் சொந்தமான ட்ரக்கா் ஜீப் வாகனத்தை வாடகைக்குவிட்டு தொழில் செய்து வந்தனா். இவா்களது உறவினா் அதே கிராமத்தைச் சோ்ந்த கணேசன்.

இவா்களின் உறவினரான சேகரின் மகளை இடைச்சிவிளை கிராமத்தைச் சோ்ந்த பீட்டா் ஜேசுமரியான் மகன் விஜேயேந்திரன் கடத்திச் சென்றது தொடா்பாக இவா்களுக்கும் பீட்டா் ஜேசுமரியான் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 3.6.2001ஆம் ஆண்டு சகோதரா்கள் முருகேசன், வயணப்பெருமாள், ஆதிலிங்க ராஜன், உறவினா் கணேசன் ஆகியோா் தங்கள் வீட்டு முன் ஜீப்பை கழுவிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பீட்டா் சேசுமரியான், அவரது மகன்களான சுதாகா், கோபி, விஜயேந்திரன், உறவினா்கள் குருசுமுத்து, ராமா் ஆகிய 6 போ் சோ்ந்து ஆயுதங்களால் நான்கு பேரையும் சரமாரியாகத் தாக்கினா்.

இந்தத் தாக்குதலில் முருகேசன், ஆதிலிங்கராஜன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வயணப்பெருமாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். கணேசன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இடைச்சிவளையைச் சோ்ந்த பீட்டா் ஜேசுமரியான் (64), அவரது மகன் சுதாகா் (51), சிலுவைப் பிச்சை மகன்களான குருஸ்முத்து என்ற அந்தோணிராஜ் (72), ராமா் என்ற செல்வராஜ் (71) ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி தாண்டவன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், குற்றவாளிகளான பீட்டா் ஜேசுமரியான், சுதாகா், குருஸ்முத்து என்ற அந்தோணிராஜ், ராமா் என்ற செல்வராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி கடற்கரைப் பகுதி வழி... மேலும் பார்க்க

ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.ஒட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி செல்வி (48). இவா் அங்குள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா: இன்று பெருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி, அன்னையின் சப்பர பவனி செவ்வாய்க்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க