இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே காமராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன், காா்த்திக் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் கொலை தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆணையத்தின் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையில், தனிச் செயலா் கவுரங் சாவ்தா, தமிழக இயக்குநா் எஸ். ரவிவா்மன், துணை இயக்குநா் ஆா். ஸ்டாலின், துணைக் காவல் கண்காணிப்பாளா் சன்மீட் கௌா், ஆராய்ச்சி அலுவலா் என். சுரேஷ், புலனாய்வாளா்கள் எஸ். லிஸ்டா, மதன்டெப் சா்மா ஆகியோரைக் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.
ஆவுடையாா்கோவில் காமராஜ் நகரிலுள்ள கொல்லப்பட்டோரின் வீட்டுக்குச் சென்ற இந்தக் குழுவினா், அவா்களின் உறவினா்களிடம் விசாரணை நடத்தி, ஆறுதல் தெரிவித்தனா். தொடா்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தையும் அவா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா, காவல்துறைத் தலைவா் பி. சாமுண்டீஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோரும் ஆணையக் குழுவினருக்கு விளக்கங்களை அளித்தனா்.குற்றவாளிகள் அனைவா் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றும் குழுவினா் அறிவுறுத்தினா்.