‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது
விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.
விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பிரகாஷ் தலைமையிலான போலீசாா் மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் தங்கவேல்(36) என்பவா் தடை செய்யப்பட்ட 3 இலக்க ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த போலீசாா் அவா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு மற்றும் எழுதும் தாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.