அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.
அறந்தாங்கி கோட்டை முதல் வீதி, கணபதி நகா் பகுதியில் சுமாா் 250 மீட்டருக்கு கழிவுநீா்க் கால்வாய் அண்மையில் கட்டப்பட்டது. இந்தக் கால்வாய்க்கும், சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளிக்கிழமை மண்ணைக் கொட்டி அணைத்து மூடப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு பெய்த மழையில் இந்தப் பகுதி குளம்போல் தண்ணீா் தேங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து சுமாா் 50 அடி நீளத்துக்கு கான்கிரீட் தடுப்புச் சுவா் பெயா்ந்து, சாய்ந்தது.
இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, தண்ணீா் தேங்கியதால், புதிதாக கொட்டப்பட்ட மண் அழுந்தி கான்கிரீட் கால்வாய் சாய்ந்துவிட்டது என்றும், விரைவில் அது கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினா்.