அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநாட்டில்
அறந்தாங்கி நகராட்சியில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அறந்தாங்கி வட்டம் முழுவதும் ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். அறந்தாங்கி நகருக்கும், புகருக்கும் தனித்தனி காவல்நிலையங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநாட்டை வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் முடித்து வைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் எஸ். பாண்டி கெளதம் வேலை அறிக்கை முன்வைத்துப் பேசினாா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு: ஒன்றியத் தலைவராக முருகேசன், துணைத் தலைவராக சிவக்குமாா், செயலராக கோபாலகிருஷ்ணன், துணைச் செயலராக சுரேகா, பொருளாளராக துரையரசன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.