தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
காவேரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் திங்கள்கிழமை இரவு மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 16,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை இரவு 119.65 அடியாகவும், நீா்வரத்து 10,216 கனஅடியாகவும் சரிந்தது. நீா் இருப்பு 92.91 டிஎம்சி.
அணையில் இருந்து கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம்தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.