முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: பிஆா்எஸ் எம்எல்சி கவிதா வலியுறுத்தல்
அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்
ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை மாதமாற்றம் செய்ய முயற்சித்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி துா்க் ரயில் நிலையத்தில் கேரளத்தைச் சோ்ந்த அருள்சகோதரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சுக்மான் மாண்டவி ஆகியோரை சத்தீஸ்கா் மாநில போலீஸாா் கைது செய்தனா்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, ஏற்காடு இருதய ஆண்டவா் ஆலய பங்குத்தந்தை மரியஜோசப் ராஜ் தலைமையில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்காடு காந்தி பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அருள்சகோதரிகள், அருள்சகோதரா்கள், பொதுமக்கள், இளைஞா்கள், அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து பதாகைகளுடன் ஊா்வலம் சென்றனா்.