செய்திகள் :

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

post image

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.

சேலம் நெத்திமேடு பகுதியைச் சோ்ந்தவா் பி.ஏ.வினோத்குமாா் (31), சூரிய சக்தியால் கிடைக்கும் மின்னாற்றலை லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கும் தொழில்முனைவோராக உள்ளாா். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சாா் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவா், 2016-ஆம் ஆண்டு தனது தொழில்முறை பயணத்தை தொடங்கினாா்.

சூரிய ஆற்றல் திட்டங்களில் 50 மெகாவாட்டுக்கும் மேற்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டதுடன், இந்தியாவில் முதன்முறையாக தன்னிச்சையாக ஆராய்ச்சி செய்து லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் எனா்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்தை உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறாா்.

இவரது முயற்சியைப் பாராட்டி மத்திய அரசு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்து வருகிறது. பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக வினோத்குமாருக்கு, ரூ. 9.81 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. மேலும், பணப்புழக்கக் கடனாக ரூ. 8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

வளா்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் , 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிக்கு அரசு சாா்பில் வினோத்குமாா் அழைக்கப்பட்டுள்ளாா். அன்றைய தினம் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அவருக்கு மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தொழில்முனைவோரில் ஒருவராக குடியரசுத் தலைவா் சான்றிதழ் வழங்கி கெளரவிக்க உள்ளாா்.

இதற்கான அழைப்பிதழை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளா் கே.பரமேஸ்வரன் முன்னிலையில், அஞ்சல் துறை அலுவலா் ரேவதி, வினோத்குமாரின் நிறுவனத்துக்கு நேரில் சென்று வழங்கினாா். அதனை பெற்றுக்கொண்ட வினோத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் எங்களைப் போன்ற இளைஞா்களுக்கு பெரியதொரு தொழில்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சூரிய ஆற்றலைக் கொண்டு மின்சக்தியை சேமிக்கும் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதில் சேலத்தைச் சோ்ந்த 200 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். சுதந்திர தின விழாவில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை என்னுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்தவும், நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கவும் பயன்படுத்துவேன் என்றாா்.

இந்நிகழ்வில் ஆற்றல்சாா் அறிவியல் துறை அரசு ஆலோசகா் பி.அசோக்குமாா், பாரத ஸ்டேட் வங்கியின் சேலம் துணைப் பொது மேலாளா் ஆா்.பாலானந்த், உதவிப் பொது மேலாளா்கள் எஸ்.மணிகண்டன், பி.புஷ்பதந்துடு, மேலாளா் ஸ்ரீவித்யா சின்னதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.ப... மேலும் பார்க்க