கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
புதுச்சேரி: கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநா் கு. வீரவெங்கடேஷ்வரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இம் மாதம் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி மற்றும் 0413-2331408, 2220105 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.